பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
திருச்சி: கர்நாடகா, ம ந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ சுபதேந்திர தீர்த்தர் சுவாமிகள், நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் சார்பில், அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின், பீடாதிபதி சுபதேந்திர தீர்த்தர்சுவாமிகள் கூறியதாவது: மந்த்ராலயத்தில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து மங்களா சாசனம் செய்து வழிபாடு நடத்தப்படும். பரமாச்சாரியார்கள், குருமார்களுடன் வந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வழிபட்டுள்ளோம். தற்போது, நான் பீடாதி பதியாக பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக வந்து, ரெங்கநாதரை தரிசனம் செய்துள்ளேன்.தமிழகத்துக்கும், ராகவேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ராகவேந்திரர் பிறந்தது, தமிழகத்தில் தான். படித்தது, பட்டாபிஷேகம் செய்து கொண்டது, தஞ்சையில் தான். தாமிரபரணி புஷ்கரத்தில் பங்கேற்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.