பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
கரூர்: கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அன்பழனிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகே, வெள்ளியணை அடுத்த குமாரபாளையத்தில், 110க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்குள்ள புன்னையார் கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து, போலீசார், வி.ஏ.ஓ.,விடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. ஆர்.ஐ., ஆய்வு செய்து, ஆக்கிரமித்த இடத்தை, ஏழு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார். ஆனால், இன்னும் காலி செய்யப்படவில்லை. கேட்டால், யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என, ஆக்கிரமிப்பாளர் மிரட்டுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.