ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் 200 கிலோ அரிசியில் அன்னாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2018 12:10
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் 200 கிலோ அரிசியில் அன்னாபிேஷகம் நடந்தது.
நேற்று (அக்., 24ல்) காலை 10:00 மணிக்கு வைத்தியநாத சுவாமிக்கு கும்பம் வைத்து, ேஹாமம் செய்து 200 கிலோ அரிசியில் அன்னாபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ் பட்டர்கள் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.செயல்அலுவலர்கள் நாராயணி, சுந்தர்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.