நிறைந்தது சிவகங்கை தெப்பம்: மகிழ்ச்சியில் சிவபக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2018 02:10
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலின் சிவகங்கை தெப்பம் நிறைந்ததால் சிவபக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலின் நுழைவு வாயிலில் சிவகங்கை தெப்பம் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பத்தின் தண்ணீரை தலையில் தெளித்து சிவகங்கை விநாயகரை தரிசித்து கோயிலுக்கு செல்வது வழக்கம்.
கடந்த 2015ல் பெய்த மழையில் நிரம்பிய இக்குளம், அடுத்த சில மாதங்களில் நீர்வற்றி வறண்டு கிடந்தது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தும் கடந்த 2 ஆண்டாக தெப்பம் நிறையவில்லை.கடந்த வாரம் செண்பகதோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மம்சாபுரம் கண்மாய் நிரம்பி பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து சிவகங்கை தெப்பத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டு நிரம்பிய நிலையில், தற்போது கோயிலின் எதிரே தாமரை குளத்திற்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தெப்பம் நிறைந்தும் கோயிலின் கோபுரத்தின் நிழல் தண்ணீரில் தெரிவது சிவபக்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.