பல்லடம்:மறு சீராய்வு மனுக்களை ஏற்று, சாதகமான தீர்ப்பு வழங்க வலியுறுத்தி, ஐயப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ப்பட்டு வருகிறது. இம்மனுவை ஏற்று, சாதகமான தீர்ப்பு வழங்க வலியுறுத்தி, பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் முன், பக்தர்கள், நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். காலை, 9 - 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது. ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.