பழநி: பழநி முருகன் கோவிலுக்கு, பாலாறு, -பொருந்தலாறு அணையிருந்து, 22 கோடி ரூபாய் செலவில், குடிநீர் கொண்டு வரும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலுக்கு, விழாக்காலங்களில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்களுக்கு, நகராட்சியால் சரிவர குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, பாலாறு அணையிலிருந்து நேரடியாக மலைக்கோவிலுக்கு தண்ணீர் கொண்டுவர, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாலாறு அணையிலிருந்து மலைக்கோவில் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். இதற்காக 22 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 18 மாதங்களில் பணிகளை முடிக்கவும், அவர்களே பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.