சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுக நாதர் வழிபட்ட வராகி அம்மனுக்கு வருடாபிஷேக விழா நடந்தது. இந்நகரில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் முத்துவடுகநாதர் வராகி அம்மனை வழிபட்டவர். மேலத்தெருவில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அவரது சந்ததியினர் அவ்வழிபாட்டை தொடர்கின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வராகி அம்மனுக்கு வருடாபிஷேக விழா நடந்தது. அக். 27ம் தேதி யாக பூஜை தொடங்கியது. அக். 28ம் தேதி வராகி அம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.