அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் வியாக்கியான தட்சணாமூர்த்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.அவலூர்பேட்டையில் காளியம்மன் கோவில் அருகேகுரு பகவானுக்கு என புதிதாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்காக வடிவமைக் கப்பட்ட வியாக்கியான தட்சணாமூர்த்தி சிலை பிரதிஷ்டை நேற்று 29ம் தேதி நடைபெற்றது.
அதனையொட்டி நேற்று முன்தினம் 28 ம் தேதி கரிக்கோல ஊர்வலமும், நேற்று (அக்., 29ல்) காலை 9 அடி உயரத்தில் வியாக்கியான தட்சணாமூர்த்தி சிலையை கிரேன் மூலம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக சிறப்பு ஹோமமும், பின்னர் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது.