Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உமா மகேஸ்வர விரத பூஜை மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 10. உமா மகேஸ்வர விரத பூஜை
காலையில் பூஜை செய்தால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
15:54

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்


ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மாமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’போ சோ’பனே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே. அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே,...*... நாம ஸம்வத்ஸரே,...*.. அயனே...*... ருதௌ, கன்யா மாஸே, சு’க்ல பக்ஷே பௌர்ணமாஸ்யம் சுபதிதௌ,...*... வாஸர யுக்தாயாம், சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’ப திதௌ.

மம இஹஜன்மனி, ஜன்ம ஜன்மாந்தரேஷு, மனோவாக்காய கர்மேந்த்ரிய க்ஞானேந்த்ரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம், காம, க்ரோத, லோப, மோஹ, மதமாத்ஸர்யாதிபி: த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக்பாணி பாத பாயூபஸ்தைச்’ ச ஸம்பாவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனார்த்தம், ஆவயோ: அன்யோன்ய ப்ரீதி ஸித்யர்த்தம், உமா மகேஸ்’வர ப்ரஸாதேன ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம், உமா மகேஸ்’வர பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’பூஜாம் ச கரிஷ்யே

பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)

அகஜானன........ உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

தேவதேவ ஜகந்நாத ஸர்வ ஸௌபாக்ய தாயக
கரிஷ்யே த்வத்வ்ரதம் தேவ ப்ரஸாதம் குரு மே ப்ரபோ

உமாமகேஸ் ’வரம் தேவம் ஸகணம் குஸுமான்விதம்
விதாய தத்ஸமீபே து வ்ரதபூஜா பராயண:

அனேக ஸூர்ய ஸங்காச ’ம் ச ’சா’ங்க சு’பமூர்த்தஜம்
அஷ்டமூர்த்திதரம் தேவம் கங்காதரமுமாபதிம்

ஸுராஸுரைர் வந்த்யமானம் ஸர்வாபரண பூஷிதம்
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் வ்யாக்ரசர்மோத்தரீயகம்

கட்ககேடகநாகைச்’ச தனுர்பாண பரச் ’வதம்
வரதாபய சூ ’லஞ்ச ம்ருகாக்ஷம் ஸ்ரக்கமண்டலம்

பிப்ராணம் பாணிபத்மைச் ’ச பஞ்சவக்த்ரம் த்ரிலோசனம்
கங்காதரம் சந்த்ரதரம் த்யோயேத் ச ’ம்பும் ஜகத்குரும்
அஸ்மின் கும்பே உமாமகேஸ்’வரம் த்யாயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

அத்ராகச்ச மஹாதேவ க்ருபயா தேவ ச ’ங்கர
ப்ரீத்யா பூஜாம் க்ருஹாணேச ’ மனோரத பலப்ரத
அஸ்மின் கும்பே உமாமகேஸ்’வரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ப்ராணப்ரதிஷ்டை

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

தோரஸ்தாபனம்

(கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சரடைக் கலசத்தின் மீது வைக்கவும்.)

ததோ தோரே த்ருடம் ஸூத்ரமுபகல்ப்ய ப்ரபூஜயேத்
விச்’வாதிக நமஸ்தேஸ்து ஸூத்ரக்ரந்திஷு ஸம்ஸ்த்தித

விச்’வாத்மனே நமஸ்துப்யம் பினாகின் ஸர்வதாயக
ரத்னஸிம்ஹாஸனம் சாரு ததாமி தவ ச ’ங்கர
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

நமச் ’சிவாய ஸோமாய ஸர்வலோக நிவாஸினே
துப்யம் ஸம்ப்ரததே பாத்யம் க்ருஹாண பரமேச்’வர
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அர்க்யானவத்ய சா ’ந்தாய அசிந்த்ய பலதாயினே
அர்க்யம் தாஸ்யாமி தேவேச ’! நீலகண்ட நமோஸ்து தே
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆதிமத்யாந்தரஹித த்ரியம்பக மகேஸ் ’வர
ததாம்யாசமனம் துப்யம் பக்திகம்யாய தே நம:
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ததிக்ஷீர க்ருதம் ச ’ம்போ! குளகண்ட விம்ச்’ரிதம்
துஷ்ட்யர்த்தம் பார்வதீநாத! மதுபர்க்கம் ததாமி தே
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன் கலந்த தயிரைத் தொட்டு தெளிக்கவும்)

மத்வாஜ்ய ச ’ர்க்கராயுக்தம் ததிக்ஷீர ஸமன்விதம்
பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி ஸ்நானம் ஸ்வீகுரு ச ’ங்கர
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: பஞ்சாம்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தொட்டு தெளிக்கவும்)

தீர்த்தராஜ! நமஸ்துப்யம் வ்யாக்ரசர்மதராய ச
பாகீரத்யாதி ஸலிலம் ஸ்நானார்த்தம் தே ததாம்யஹம்
ஸ்ரீஉமாமகேஸ்’ வராய நம: சு’த்தோதகஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும். தெரிந்தால் ருத்ரம், சமகம் சொல்லவும்)

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: ஸ்நானானந்தரம்
அசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தேவதேவ ஜகன்னாத ஸர்வமங்கள காரக
கஜ சர்மோத்தரீயாய வஸ்த்ரம் ஸம்ப்ரததே சு’பம்
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

சராசர ஜகத்வந்த்ய! ப்ரஹ்மஹூத்ர  பராயண
நாகயஜ்ஞோபவீதாய உபவீதம் ததாம்யஹம்
ஸ்ரீஉமாமகேஸ் ’வராய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

பராத்பர மஹாதேவ! நாகாபரண பூஷித
க்ருஹாண பூஷணம் ச ’ம்போ! ச ’ரணாகத வத்ஸல
ஸ்ரீஉமாமகேஸ் ’வராய நம: ஆபரணம் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குஸுமான்விதம்
கந்தம் தாஸ்யாமி தேவேச ’! க்ருஹாண பரமேச்’வர
ஸ்ரீஉமாமகேஸ் ’வராய நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

பக்ஷித்வஜ விரிஞ்சாத்யை: யக்ஷதைத்யாதிபி: ஸுரை:
அக்ஷதை: பூஜிதம் தேவ! திலஸம்மிச் ’ரகை: ஸஹ
ஸ்ரீஉமாமகேஸ் ’வராய நம: கந்தோபரி
ஹரித்ர குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமமிடவும்)

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ஜாஜீ சம்பக புன்னாக பில்வபத்ரைச் ’ச பங்கஜை:
தவ பூஜாம் கரோமீச ’ ப்ரஸாதம் குரு மே ப்ரபோ
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

ஓம் சி’வாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் ச ’ர்வாய        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஈசா’னாய        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஈச்’வராய        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
ஓம் பசு’பதயே        நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)
ஓம் பரமாத்மனே        நம: ஹ்ருதயம்        பூஜயாமி (மார்பு)
ஓம் ஸர்வாஸ்த்ரதாரிணே    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் நீலகண்டாய        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ருத்ராய        நம: ச்’ரோத்ராணி    பூஜயாமி (காதுக்கள்)
ஓம் உக்ராய        நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
ஓம் பஞ்சவக்த்ராய    நம: முகானி        பூஜயாமி (முகம்)
ஓம் த்ரியம்பகாய    நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
ஓம் பாலலோசனாய    நம: லலாடானி        பூஜயாமி (நெற்றி)
ஓம் கங்காதராய        நம: சி’ர:        பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வேச்’வராய    நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி முழுவதும்)

சி’வாஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் சி’வாய        நம:
ஓம் மகேஸ்’வராய    நம:
ஓம் ச ’ம்பவே        நம:
ஓம் பினாகினே        நம:
ஓம் ச ’சி’சே ’கராய    நம:
ஓம் வாமதேவாய    நம:
ஓம் விரூபாக்ஷாய    நம:
ஓம் கபர்தினே        நம:
ஓம் நீலலோஹிதாய    நம:
ஓம் ச ’ங்கராய (10)    நம:
ஓம் சூ’லபாணயே    நம:
ஓம் கட்வாங்கிணே    நம:
ஓம் விஷ்ணுவல்லபாய    நம:
ஓம் சி’பிவிஷ்டாய    நம:
ஓம் அம்பிகா நாதாய    நம:
ஓம் ஸ்ரீகண்டாய        நம:
ஓம் பக்தவத்ஸலாய    நம:
ஓம் பவாய        நம:
ஓம் ச ’ர்வாய        நம:
ஓம் த்ரிலோகேசா’ய (20)    நம:
ஓம் சி ’தி கண்டாய    நம:
ஓம் சி’வாய ப்ரியாய    நம:
ஓம் உக்ராய        நம:
ஓம் கபர்தினே        நம:
ஓம் காமாரயே        நம:
ஓம் அந்தகாஸுர ஸூதனாய    நம:
ஓம் கங்காதராய        நம:
ஓம் லலாடாக்ஷாய    நம:
ஓம் கால காலாய        நம:
ஓம் க்ருபா நிதயே (30)    நம:
ஓம் பீமாய        நம:
ஓம் பரசு’ ஹஸ்தாய    நம:
ஓம் ம்ருகபாணயே    நம:
ஓம் ஜடாதராய        நம:
ஓம் கைலாஸ வாஸினே    நம:
ஓம் கவசினே        நம:
ஓம் கடோராய        நம:
ஓம் த்ரிபுராந்தகாய     நம:
ஓம் வ்ருஷாங்காய    நம:
ஓம் வ்ருஷபாரூடாய (40)    நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய   நம:
ஓம் ஸாம ப்ரியாய    நம:
ஓம் ஸ்வரமயாய        நம:
ஓம் த்ரயீமுர்த்தயே    நம:
ஓம் அனீச்’வராய    நம:
ஓம் ஸர்வஜ்ஞாய    நம:
ஓம் பரமாத்மனே        நம:
ஓம் ஸோம ஸூர்யாக்னி
லோசனாய        நம:
ஓம் ஹவிஷே        நம:
ஓம் யஜ்ஞ மயாய (50)    நம:
ஓம் ஸோமாய        நம:
ஓம் பஞ்சவக்த்ராய    நம:
ஓம் ஸதாசி’வாய        நம:
ஓம் விச்’ வேச்’வராய    நம:
ஓம் வீரபத்ராய        நம:
ஓம் கணநாதாய        நம:
ஓம் ப்ரஜாபதயே        நம:
ஓம் ஹிரண்ய ரேதஸே     நம:
ஓம் துர்தர்ஷாய        நம:
ஓம் கிரீசா’ய (60)    நம:
ஓம் கிரிசா’ய        நம:
ஓம் அனகாய        நம:
ஓம் புஜங்க பூஷணாய    நம:
ஓம் பர்க்காய        நம:
ஓம் கிரிதன்வனே    நம:
ஓம் கிரிப்ரியாய        நம:
ஓம் க்ருத்திவாஸஸே    நம:
ஓம் புராராதயே        நம:
ஓம் பகவதே        நம:
ஓம் ப்ரமதாதிபாப (70)    நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய    நம:
ஓம் ஸூக்ஷ்ம தனவே    நம:
ஓம் ஜகத் வ்யாபினே    நம:
ஓம் ஜகத் குரவே        நம:
ஓம் வ்யோம கேசா’ய    நம:
ஓம் மஹாஸேன ஜனகாய    நம:
ஓம் சாரு விக்ரமாய    நம:
ஓம் ருத்ராய        நம:
ஓம் பூத பதயே        நம:
ஓம் ஸ்தாணவே    (80)    நம:
ஓம் அஹிர்புத்ன்யாய    நம:
ஓம் திகம்பராய        நம:
ஓம் அஷ்ட்மூர்த்தயே    நம:
ஓம் அனேகாத்மனே    நம:
ஓம் ஸாத்விகாய        நம:
ஓம் சு’த்த விக்ரஹாய    நம:
ஓம் சா’ச்’வதாய        நம:
ஓம் கண்ட பரச ’வே    நம:
ஓம் அஜாய        நம:
ஓம் பாப விமோசனாய (90)    நம:
ஓம் ம்ருடாய        நம:
ஓம் பசு’பதயே        நம:
ஓம் தேவாய        நம:
ஓம் மஹாதேவாய    நம:
ஓம் அவ்யயாய        நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் பகநேத்ரபிதே    நம:
ஓம் அவ்யக்தாய        நம:
ஓம் தக்ஷாத்வரஹராய    நம:
ஓம் ஹராய (100)     நம:
ஓம் பூஷதந்தபிதே     நம:
ஓம் அவ்யக்ராய        நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய    நம:
ஓம் ஸஹஸ்ரபதே    நம:
ஓம் அபவர்க்க ப்ரதாய    நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் தாரகாய        நம:
ஓம் பரமேச்’வராய    நம:
ஓம் உமாமகேஸ்வராய (109)    நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் சேர்க்கவும்.)

க்ரந்தி (கயிறு முடிச்சில் ) பூஜை
க்ரந்தி பூஜை 16 இருக்க வேண்டும்.

ஓம் சி’வாய        நம: ப்ரதம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் ச ’ர்வாய        நம: த்விதீய க்ரந்திம்    பூஜயாமி
ஓம் ருத்ராய        நம: த்ருதீய க்ரந்திம்    பூஜயாமி
ஓம் பசு’பதயே        நம: சதுர்த்த க்ரந்திம்    பூஜயாமி
ஓம் உக்ராய        நம: பஞ்சம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் மஹாதேவாய    நம: ஷஷ்டி க்ரந்திம்    பூஜயாமி
ஓம் பீமாய        நம: ஸப்தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் ஈசா’னாய        நம: அஷ்டம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் உமாபதயே        நம: நவம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் ச ’ம்பவே        நம: தச ’ம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் சூ’லினே        நம: ஏகாதச ’தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் அம்ருதேசா’ய    நம: த்வாதச ’தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் வாமதேவாய    நம: த்ரயோதச ’தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் காலகாலாய        நம: சதுர்தச ’தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் காலாத்மனே        நம: பஞ்சதச ’ தம க்ரந்திம்    பூஜயாமி
ஓம் உமாமகேஸ்வராய     நம: ஷோடச க்ரந்திம்    பூஜயாமி

கும்பத்திற்கு நான்கு பக்கத்திலும் திக்பால பூஜை செய்ய வேண்டும்.

(கிழக்கில்)     ஓம் இந்த்ராய    நம:
(தென்கிழக்கில்)  ஓம் அக்னேய    நம:
(தெற்கில்)    ஓம் யமாய    நம:
(தென்மேற்கில்)  ஓம் நிர்ருதயே    நம:
(மேற்கில்)    ஓம் வருணாய    நம:
(வடமேற்கில்)      ஓம் வாயவே    நம:
(வடக்கில்)    ஓம் ஸோமாய    நம:
(வடகிழக்கில்)    ஓம் ஈசா’னாய     நம:

நந்திகேச் ’வர பூஜை

கும்பத்திற்கு எதிரில் மஞ்சள் பிம்பத்தில் நந்திகேச்’வரரைப் பூஜிக்கவும். புஷ்பம், அக்ஷதைகளால் அர்ச்சிக்கவும்.

சூ’லாங்குச ’தரம் தேவம் மஹாதேவஸ்ய வல்லபம்
சி’வகார்ய விதானஜ்ஞம் த்யாயே த்வாம் நந்திகேச் ’வரம்

தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தன்னோ நந்தி: ப்ரசோதயாத் (ஆண்கள் மட்டும்)

நந்திகேச்’வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

நந்திகேச்’வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நந்திகேச்’வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நந்திகேச்’வராய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நந்திகேச் ’வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(தேன்கலந்த தயிரை புஷ்பத்தால் தொட்டு தெளிக்கவும்)

நந்திகேச்’வராய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

நந்திகேச் ’வராய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நந்திகேச்’வராய நம: வஸ்த்ர  யஜ்ஞோபவீத
உத்தரீய  ஆபரணார்த்தே அக்ஷதான்
ஸமர்ப்பயாமி (அக்ஷதைகளை போடவும்)

கந்தான் தாரயாமி
(சந்தனம் ஸமர்ப்பிக்கவும்.)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதைகளை போடவும்)

உத்தராங்க பூஜை

தூபம் குக்குலு ஸம்யுக்தம் குங்குமாகரு மிச் ’ரிதம்
உமா மகேஸ்’வர விபோ தத்தம் ஸ்வீகுரு ச ’ங்கர
ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்
ஸ்ரீஉமாமகேஸ் ’வராய நம: தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஷட்விதம் ஷட்ரஸோபேதம் பாயஸாபூப ஸம்யுதம்
சா’ல்யன்னம் ஸக்ருதம் ச ’ம்போ நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்

உமாமகேஸ் ’வராய நம: சா’ல்யன்னம், க்ருதகுளபாயஸம், பக்ஷ்ய
விசே ’ஷம், பலானி, ஏதத்ஸர்வம் மஹா நைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதானமஸி
உத்தராபோச ’னம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்.)

நீராஜனம் மஹாதேவ கோடிஸூர்ய ஸமப்ரப
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி
ஸ்வீகுருஷ்வ தயானிதே
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும், அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய ச ’ம்பவே
அம்ருதேசா’ய ச ’ர்வாய மஹாதேவாய தே நம:

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம:
ஸமஸ்தராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி ப்ரணச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

நமஸ்தே ஸர்வலோகேச ’ நமஸ்தே புண்யமூர்த்தயே
நமோ வேதாந்த வேத்யாய ச ’ரண்யாய நமோ நம:

அன்யதா ச ’ரணம் நாஸ்தி த்வமேவ ச ’ரணம் மம
தஸ்மாத் காருண்யபாவேன ரக்ஷ ரக்ஷ மகேஸ் ’வர

ஸ்ரீஉமாமகேஸ்’வராய நம: அனந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காரா: ஸமர்ப்பயாமி

நமஸ்தே கிரிஜா நாத பக்தாநாமிஷ்ட தாயக
ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்
த்வயி பக்திம் ச தேஹி மே
(ப்ரார்த்தனை செய்யவும்)

தேவ தேவ ஜகன்னாத! ஸர்வஸெபாக்ய தாயக
க்ருஹ்ணாமி தோரரூபம் த்வாம் ஸர்வாபீஷ்ட பலப்ரத
தோரம் க்ருஹ்ணாமி
(என்று சரடை எடுத்துக் கொள்ளவும்)

நம: பஞ்சதச ’க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்த்தாய ச ’ம்பவே
தயாகராய தேவாய ச ’ங்கராய நமோ நம:
(சரடைக் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்)

ஹர பாபானி ஸர்வாணி சு’பம் குரு தயாநிதே
க்ருபயா தேவ தேவேச ’ மாமுத்தர பவார்ணவாத்

ஜகத் ப்ரபோ தேவதேவ ஸர்வாபீஷ்ட பலப்ரத
வ்ரதம் மே ஸத்குணம் பூயாத் தேவதேவ தயாநிதே
(பழைய சரடை நீக்கவும்)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் பௌர்ணமாஸ்யாம் சு’ப திதௌ ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் உமாமகேஸ்’வர பூஜாந்தே அர்க்ய ப்ரதானம் உபாயனதானம் ச கரிஷ்யே

நமஸ்தே பார்வதீ காந்த பக்தானாம் வரத ப்ரபோ
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி, க்ருஹ்யதாம் பரமேச்’வர
உமாமகேஸ்’வராய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

நமஸ்தே தேவி ஸர்வஜ்ஞே ப்ரபன்ன பய ஹாரிணி
ப்ரஸீத மம தேவேசி’ சி’வேன ஸஹ பார்வதி
உமாயை நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
ஸர்வம் உமாமகேஸ்’வர: ப்ரீயதாம்

தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து (பஞ்சாக்ஷர ஜெபம் செய்யலாம்)

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

உமாமகேஸ்’வர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்,
கந்தாதி ஸகலாரதனை: ஸ்வர்ச்சிதம்.
(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அதச்’சா’ந்திம் ப்ரயச்சமே

உமேச ’: ப்ரதிக்ருஹ்ணாதி உமேசோ ’வை ததாதி ச
உமேச ’ஸ்தாரகோ த்வாப்யாம் உமேசா’ய நமோ நம:

இதம் உபாயனம் உமாமகேஸ்’வர பூஜா ஸாத்குண்யம்
காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம
என்று சொல்லி, தாம்பூலம், பழம், தேங்காய், தக்ஷிணை இவைகளை ஸமர்ப்பித்து, நமஸ்காரம் செய்து, அபிவாதனம் செய்யவும்.

புனர் பூஜை / யதாஸ்தானம்

மறுநாள் காலையில் அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து ஸ்ரீஉமா மகேஸ்வரருக்கு தூப  தீபம், கற்பூரம், காட்டி, “ஸ்ரீஉமா மகேஸ்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச என்று கூறி, கலசத்தை வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

பதினாறு தானங்களின் பெயர்கள்:

1. உமாமகேஸ்’வர: 2.  சி’வ 3. ச ’ர்வ 4. ருத்ர: 5. பசு’பதி: 6. உக்ர: 7. மஹாதேவ: 8. பீம: 9. ஈசா’ன: 10. உமாபதி: 11. ச ’ம்பு: 12. சூ ’லீ 13. அம்ருதேச: 14. வாமதேவ: 15. கால கால: 16.காலாத்மா

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 10. உமா மகேஸ்வர விரத பூஜை »
துர்வாசர் கைலைச் சென்று சிவபெருமானை ஆராதித்தார். பரமேஸ்வரன் சந்தோஷத்துடன் தன் கழுத்திலிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar