Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷோடசோ’பசார பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 17. துளஸீ பூஜை
ப்ருந்தாவன பூஜை என்னும் துளஸீ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

மஹிமை

கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியான சத்யபாமா ஒரு சமயம் நாரதரைச் சந்தித்தபோது கணவனான கண்ணனை விட்டுப் பிரியாமல் இருக்க வழி ஒன்று சொல்லும்படி கேட்டாள். நாரதரும், யாருக்காவது கண்ணனைத் தானமாகத் தந்து விட்டுப் பிறகு பெற்றால் கண்ணன் அவளை விட்டுப் பிரியாமல் இருப்பான், என்று கூறினார். சத்யபாமாவோ நாரதருக்கே கண்ணனைத் தானமாகத் தந்தாள். தானம் பெற்ற நாரதரும், கண்ணனது எடைக்கு எடைபொருள் தந்தால் திருப்பிக் கண்ணனைத் தருவதாகக் கூறினார். ஒரு பெரிய தராசில் கண்ணனை உட்கார வைத்து, எதிர்த்தட்டில் தங்கம், வைரம் உட்பட ஏராளமான பொருட்களை வைத்தும் எடை நேராகவில்லை. கடைசியில் கண்ணன் சொல்படி, கண்ணனுக்கு எதிராக இருந்த தாரசுத்தட்டில் துளசியை வைக்க எடை நேரானது. கண்ணனை மறுபடியும் அடைந்து மகிழ்ந்தாள் சத்யபாமா. (அனைவருக்கும் தெரிந்த இக்கதை சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே. இதற்கு மேல் நடந்தது தான் இதைவிட முக்கியம்.) நாரதர் துளசியுடன் சென்றார்.

அவர் போனதும், யோகிகளால் கூட அடைய முடியாத உங்களைப் பிரியாமல் இருக்கும்படி, நாரதருக்கு தானம் செய்து இதோ மறுபடி பெற்றிருக்கிறேன். போன பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ? அதை நீங்கள் சொல்ல வேண்டும். அதைத் தெரிந்து கொண்டு, அதையே மறுபடியும் கடைப்பிடித்து உங்கள் நித்ய உலகத்தை அடைவேன் ”, என்று வேண்டினாள். கண்ணனும் “பாமா! அந்த புண்ணியத்தின் ரகசியத்தைச் சொல்கிறேன், கேள் ”, என்று சொல்ல ஆரம்பித்தார்.

மாயாபுரி என்னும் நகரத்தில் தேசவர்மா என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தர்மம் தவறாமல், சூரியனை வழிபட்டு வந்தான். சூரியனின் அனுக்ரஹித்தினால் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் குணவதி என்று பெயர் வைத்தான். குழந்தையும் தன் பெயருக்கேற்ப நல்ல குணங்களுடன் விளங்கியதோடு அழகியாகவும் விளங்கினாள், பருவம் வந்ததும் அவள் தந்தையான தேவசர்மா, அவளைச் சந்திரன் என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். தம்பதிகளைத்தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான்.

ஒருநாள் தேவசர்மாவும், மாப்பிள்ளையான சந்திரனும் தர்பபை, சமித்து முதலியவை கொண்டு வருவதற்காகக் காடு சென்ற போது, இருவரும் ஒரு அரக்கனால் கொல்லப்பட்டனர். கணவனும், தந்தையும் இறந்து போனதைக்கண்ட குணவதி மிகவும் வருத்தத்துடன் அவர்களுக்குப் பிரேத ஸம்ஸ்காரம் செய்து முடித்தாள்.

பிறகு தன் சொந்த ஊரான மாயாபுரியில் உள்ள பெருமாள் கோவிலில் துளசி நந்தவனம் வைத்துப் பரிபாலனம் செய்ததுடன் தீர்த்த யாத்திரை, உபவாசம் துளசி விரதம் (பூஜை) செய்ய உதவுதல் முதலியவற்றில் தன் வாழ்நாளைக் கழித்து வந்தாள். இப்படியே அவள் வாழ்நாள் முடிந்தது.

தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்ட நாள் (மகா விஷ்ணு) வைகுண்டவாசத்தை விட்டு பூபாரம் தீர்க்கக் கண்ணனாய் அவதரித்தேன். பாமா! நீதான் அந்தக் குணவதி. துளசிவனம் வைத்ததுடன், விரதத்தையும் மறவாமல், என்னையே ஆராதனை செய்து வந்ததால்,  என்னைப்பதியாக அடைந்தாய். அஷ்ட லக்ஷ்மிகளும் உன் வீட்டில் இருக்கிறார்கள்,” என்று சத்யபாமாவின் போன பிறவியைச் சொன்னதுடன் துளசி மகிமை, விரதம் இவற்றையும் சொன்ன கண்ணன், இதைப்போலச் செய்பவர்களுக்கு சர்வ மங்கலங்களும் நிச்சயம் உண்டாகும், ” என்று சத்தியவாக்கும் சொன்னார்.

முற்கால முனிவரின் சீடனான சோழமன்னன், துளசி மகிமை அறிந்து குரு உபதேசம் பெற்றுத் துளசி பூஜை செய்து உத்தமான உயர்ந்த வைகுண்டப் பதவியையே அடைந்தான். மதுசூதனன் என்ற வேதவிற்பன்னர் துளசி வழிபாடு முறையாகச் செய்து வந்தவர், தன் துளசி வழிபாட்டின் பலனைத்தந்து, பக்கத்து வீட்டுக்காரனான மாதவன் என்பவனை மரணத்திலிருந்தே காப்பாற்றினார்.

வீட்டில் அழகுக்காக என்று ஒன்றுக்கும் உதவாத குரோட்டன்ஸ் வகைகளை வைக்கக் கூடியவர்கள் துளசியையும் வைத்து வளர்த்து வரும்படி வேண்டுகிறோம். துளசியின் மருத்துவ மேன்மையை இன்றைய விஞ்ஞானம் கூறுவதையும் நோக்கி, துளசியை வளர்க்க வேண்டும். துளசி செடி இருந்தால் இடி விழாது என்பர் சிலர்.

துளசியை ஒவ்வொரு இலையாக இட்டுப் பூஜை செய்ய வேண்டும். ஒரே இலையை கிள்ளிக் கிள்ளிப் போடக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மத்யானம், சந்தியாகாலம், இரவு முதலிய காலங்களில் துளசியைப் பறிப்பது பாவம், சுமங்கலிகள் வெள்ளிக்கிழமை துளசி தளத்தைப் பறிக்கக்கூடாது. கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்பவர்களும், துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களுக்கும் அவர்களது எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் ” என ப்ரஹ்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.

துளசி விவாஹம் நடந்த நாள்:

ஐப்பசி அல்லது கார்த்திகை, சுக்லபக்ஷ துவாதசி (ப்ருந்தாவன துவாதசி என்று பெயர்)

குறிப்பு: 1. வீட்டில் வெயில் படும் இடத்தில் துளசிமாடம் அமைத்து ஸ்த்ரீகள் நித்யமும் துளசிக்கு ஜலம்விட்டு சிறிது பால் தெளித்து, துளசிதொட்டிக்கு குங்குமம் இட்டு, விளக்கு ஏற்றி ஏதாவது நைவேத்யம் செய்வது மிகவும் உகந்தது. இதற்கு பிரதிதினம் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

2. துளசி லக்ஷ்மி ஸ்வரூபமாகும். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மஹாவிஷ்ணு ஸ்வரூபம்) சேர்த்து வைக்க வேண்டும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. துளசி மாடத்தில் நெல்லிமரக்கிளையை (குச்சி) நட்டு ஆவாஹனம் செய்யவும்.

3. வீட்டில் ஸாலக்ராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தையும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

4. நைவேத்ய பொருட்கள்: சாதம், பால், பாயஸம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.

5. புஷ்பங்களால் அர்ச்சிப்பது மிகவும் விசேஷம்.

6. பால் பாயஸத்தை பாத்திரத்துடன் தானம் கொடுத்து, ப்ராம்மண போஜனம் செய்விக்கவேண்டியது மிக முக்கியம்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மாபோத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்வீதீய பரார்த்தே, ச் ’வேதவராஹ கல்பே, வைவஸ்த மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *... நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, ச ’ரத் ருதௌ, விருச்’சிக மாஸே, சு’க்ல பக்ஷே, த்வாதச்’யாம் சு’பதிதௌ, *.... வாஸர யுக்தாயாம், *..... நக்ஷத்ர யுக்தாயாம் ச, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயராரோக்ய ஐச் ’வர்யாபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், புத்ர பௌத்ராபிவ்ருத்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், மனோவாஞ்சாபல ஸித்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோபசா’ந்த் யர்த்தம், ஸ்ரீமஹாவிஷ்ணு துளஸீ ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்ரீமஹாவிஷ்ணு துளஸீ பூஜாம், கரிஷ்யே, ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே
 (*பஞ்சாங்கம் பார்க்கவும்)
விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 17. துளஸீ பூஜை »

ஷோடசோ’பசார பூஜை நவம்பர் 01,2018

த்யாயேச் ’ச துளஸீம் தேவீம் ச்’ யாமாம் கமலலோசனாம்ப்ரஸன்னாம் பத்ம கல்ஹாராம் வரதாப்யாம் ... மேலும்
 
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே     நம:ஓம் யாதவேந்த்ராய    நம:ஓம் யதூத்வஹாய    நம:ஓம் வனமாலினே   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar