Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம நவமி பூஜை மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 27. ராம நவமி பூஜை
மந்த்ரபுஷ்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

மந்த்ரபுஷ்பம்


(கையில் துளசி, புஷ்பங்கள் எடுத்துவைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

யோபாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசு ’மான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசு ’மான் பவதி
ஸ்ரீராமச்சந்த்ர ஸ்வாமினே நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ப்ரார்ததனை

த்யக்த்வா ஸுதுஷ்த்யஜ ஸுரேப்ஸித ராஜ்ய லக்ஷ்மீம்
தர்மிஷ்ட ஆர்ய வசஸாயத காதரண்யம்
மாயா ம்ருகம் தயிதேப்ஸித மன்வதாவத்
வந்தே மஹாபுருஷ தே சரணாரவிந்தம்

யானி கானிச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ஸ்ரீராமச்சந்த்ர ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

ராஜோபசாரங்கள்

அனந்தோ நாகராஜோயம் ஆதபம் வாரயன் பணை:
ஸேவதே நித்யத்ருப்தாத்மா தஸ்ய ச்சத்ரம் மயா த்ருதம்
ஸ்ரீராமச்சந்த்ர ஸ்வாமினே நம:
சத்ரம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)
க்ஷீராப்திர் துக்தபிந்தூன் வை கிரத்பிர் வீசிபாணிபி:
ஸேவதே யம் மயா தஸ்மை சாமரம் வீஜ்யதே (அ) துனா
ஸ்ரீராமச்சந்த்ர ஸ்வாமினே நம:
சாமரம் வீஜயாமி     (சாமரம் விசிறவும்)
வ்யஜனேன வீஜயாமி,    (விசிறியால் விசிறவும்)
கீதம் ச் ’ராவயாமி    (கீர்த்தனை பாடவும்)
ந்ருத்தம் தர்ச ’யாமி      (நர்த்தனம் செய்யவும்)
வாத்யம் கோஷயாமி     (வீணை, பிடில், மிருதங்கம் போன்ற வாத்தியங்கள் வாசிக்கலாம்.)

(இந்த உபசாரங்களை சொல்லி உள்ளபடி செய்ய இயலாவிடில் அக்ஷதைகளை போடவும்)

ஸமஸ்த ராஜோபசார பூஜான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை சேர்க்கவும்)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் ’வர
ப்ரீத்யர்த்தம், ராம நவமி புண்யகாலே ஸ்ரீராம பூஜாந்தே
க்ஷீரார்க்ய ப்ரதானம், உபாயன தானம் ச கரிஷ்யே

ராம ராத்ரிஞ்சரா ராதே க்ஷீர மத்வாஜ்ய கல்பிதம்
பூஜாந்தே அர்க்யம் மயா தத்தம் ஸ்வீக்ருத்ய வரதோ பவ
(வலது கையில் பால் புஷ்பம் சேர்த்து ஜலத்துடன் கிண்ணத்தில் விடவும்.)

அனயா பூஜயா ஸ்ரீஸீதாலக்ஷ்மண பரதச ’த்ருக்ன
ஹநுமத்ஸமேத ஸ்ரீராமச்சந்த்ர: ப்ரீயதாம்

உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

ஸ்ரீராமச்சந்த்ர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

(என்று ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்)

(தாம்பூலம் தக்ஷிணை, வாயனம் ஆகியவற்றைக் பின்வரும் மந்த்ரம் சொல்லித் தரவேண்டும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்யபலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம்
ஸ்ரீராமச்சந்த்ர ப்ரீதிம் காமயமாந:
துப்யமஹம் ஸமப்ரததே ந மம

புனர் பூஜை / யதாஸ்தானம்

பிறகு, அன்று மாலை அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து,

யஸ்ய ஸ்ம்ருத்யா  ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்
“ஸ்ரீஸீதாலக்ஷ்மண பரதச ’த்ருக்ன ஹநுமத் ஸமேத
ஸ்ரீராமச்சந்த்ரம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி”
“சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி அக்ஷதை சேர்த்து வடக்கு முகமாக ராமர் படத்தை நகர்த்தி பூஜையை முடிக்கவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 27. ராம நவமி பூஜை »
ராமர் சித்திரை மாதம் நவமியன்று புனர்பூசம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர். கிருஷ்ணாவதாரம் நள்ளிரவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar