* கந்தசஷ்டி விரத துவக்கநாளான நாளை அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டி இருப்பவர்கள் பால், பழம் உண்ணலாம். * முருக மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா இவற்றில் ஏதேனும் ஒன்றை நாள் முழுவதும் ஜபித்து வர வேண்டும். * திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம், சுப்ரமண்ய புஜங்கம் பாடல்களில் முடிந்ததை காலை, மாலையில் பாராயணம் செய்ய வேண்டும். * தினமும் முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். * கோயிலுக்கு குழுவாகச் செல்பவர்கள் ஒருவர் முருக நாமத்தைச் சொல்ல மற்றவர் அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா. * மலைக்கோயில்களில் மலையை சுற்றிவர மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது சிறப்பு.