கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் சிவன் கோவிலில், தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் சிறப்பு பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, தீபாவளி பண்டிகையொட்டி, மக்கள் சிறப்பு பூஜை செய்து, சுவாமியை வழிபட்டனர். கோவிலில் உள்ள மகாலட்சுமி சன்னதியில், சிறப்பு பூஜை நடந்தது. இதில் லாலாப்பேட்டை, கருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர், பங்கேற்றனர்.