பதிவு செய்த நாள்
08
நவ
2018
12:11
பால்நல்லூர்: பால்நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள பரஞ்ஜோதி பாபா ஆஸ்ரமத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று (நவ 7ல்.,) நடந்தது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்து, பால்நல்லூர் ஊராட்சி உள்ளது.
இங்கு, வடபழனி பரஞ்ஜோதி பாபா அறக்கட்டளையின், ஆஸ்ரமம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இங்கு உள்ள ஸ்ரீலஸ்ரீ பரஞ்ஜோதி பாபா ஜீவ சமாதிக்கு சென்று ஏராளமான பொதுமக்கள் வணங்கி செல்கின்றனர். மாதந்தோறும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், இரவு, 12:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.இது தவிர, மாதந்தோறும், பரஞ்ஜோதி பாபாவின் திருவோணம் நட்சத்திரம் அன்று பொதுமக்களுக்கு இலவச தியான பயிற்சி கற்று தரப்படுகிறது.மேலும், இங்குள்ள அன்னதான கூடத்தில், தினமும், 200 பேருக்கு மேல், மதிய உணவு அன்னதானமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆஸ்ரமத்தில், நேற்று (நவ., 7ல்), அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.