பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
ஈரோடு: ஈரோடு, திண்டல் மலை மீதுள்ள வேலாயுத சுவாமி கோவிலில், கணபதி ஹோமத் துடன் சஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்)துவங்கியது.
கணபதி ஹோமம், யாக பூஜை நடந்தது. காப்பு கட்டி வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, கோவிலில் காப்பு கட்டப்பட்டது. சிறப்பு பூஜையை தொடர்ந்து, கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலையில் சண்முகார்ச்சனை நடந்தது.
இன்று (நவம்., 9ல்) காலை, 9:00 மணிக்கு மேல் ஷடாசர ஹோமம், 10:30 மணிக்கு அபிஷேக தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு சங்காபிஷேகம், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகா அபிஷேகம், 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுப்பிரமணிய பிரசந்த மாலா மந்திர ஹோமம், 13ம் தேதி பாலாபிஷேகம், பக்தர்களின் பால்குட கிரிவலம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு வேலாயுத சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கிரிவலம் நடக்க உள்ளது.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை உடனமர் ஆறுமுக கடவுள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சஷ்டி விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று 8 ம் தேதி தொடங்கியது. இன்று முதல், 12ம் தேதி வரை, காலை மற்றும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடக்கும். சூரசம்ஹாரம், 13ல் நடக்கிறது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 14ல் நடக்கிறது.