பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், கந்த சஷ்டி விழாவையொட்டி, நேற்று 8ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பிரசன்ன விநாயகர் கோவில், மடத்துக்குளம், ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் விழா நடந்தது. தொடர்ந்து, 14ம் தேதி சூரசம்ஹாரம் வரை, நாள்தோறும், கோவில்களில், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. நேற்று (நவம்., 8ல்) காப்பு கட்டி, பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.