பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
அன்னூர்:கோவில்பாளையம் மற்றும் குமரன்குன்று கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று நவம்., 8ம் தேதி துவங்கியது.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. கந்த சஷ்டி விழாவில் நேற்று (நவம்., 8), காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக பூஜை நடந்தது. பின், காப்பு கட்டுதலும், கொடியேற்றுதலும் நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வரும், 13ல் கரட்டுமேடு ரத்தினகிரி மருதாசல கடவுள் திருக்கோவிலில் வேல் பூஜை, வேல் வாங்குதல் நடக்கிறது; மாலை 4:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு வேள்வி பூஜை, உற்சவர் வீதியுலா நடக்கிறது.
14ம் தேதி காலை, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.குமரன்குன்று கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று (நவம்., 8ல்) கந்த சஷ்டி விழா துவங்கியது. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ர மணியருக்கு அலங்கார பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.வரும், 13ம் தேதி காலை, 9:30 மணிக்கு, நாம ஜெபம், கலச பூஜை, அபிஷேகம் ஆராதனை நடக்கிறது.
மதியம், 3:30 மணிக்கு சுவாமி கிரிவலம், சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு முழுவதும் குமரன் குன்று குழு பஜனை நடக்கிறது. 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு சுவாமி திருக்க ல்யாணம் நடக்கிறது.