பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
பாகூர்:குருஜி முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா ருத்ராபிஷேகம் நடந்தது.பாகூரில் முதலாம் பராந்தக சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சென்னை மணிமங்கலம் படப்பை குருஜி முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று 8 ல்,முன்னதினம் மூலநாதர் சுவாமிக்கு மகா ருத்ராபிஷேகம் நடந்தது. இதில், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 11 திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11 முறை ருத்ரபாராயணமும், ருத்ரபிரசீவி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.