சபரிமலை சிறப்பு அதிகாரியாக சேலத்தை சேர்ந்தவர் நியமனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2018 02:11
மூணாறு:தேவிகுளம் சப்- கலெக்டராக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரேம்குமார், சபரிமலை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா, இடுக்கிமாவட்டம் தேவிகுளம் சப் -கலெக்டராக சேலத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 2017 ஜூலையில் பொறுப்பேற்றார். இவர் ஆக்கிரமிப்புக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சபரிமலை சிறப்பு அதிகாரியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டார்.
சபரிமலையில் போராட்டம் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்க இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில், ஏற்கனவே பத்தினம்திட்டா சப் கலெக்டராக பணியாற்றிய பிரேம்குமாருக்கு, அங்குள்ள சூழ்நிலைகள் நன்கு தெரியும் என்பதால் சபரிமலை பிரச்னைகளை எளிதில் கையாள்வார் என அரசு நம்பியதால் இப்பொறுப்பு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.