நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2018 02:11
நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா, நேற்று (நவம்., 8ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா, நேற்று முன்தினம் மாலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று (நவம்., 8ல்) இரவு செல்வமுத்துக்குமரப்பா சாமிக்கு உற்சவம் நடந்தது. வரும் 11ம் தேதி ஆட்டுகிடா வாகனத்தில் வீதி உற்சவமும், 12ம் தேதி இரவு 8 மணிக்கு வேல்வாங்குதல், தொடர்ந்து இந்திர விமானத்தில் வீதி உற்சவம் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 6 மணிக்கு நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை பஞ்சமூர்த்திக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், இரவு 8 மணிக்கு சோடசோபா தீபாராதனை நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உற்சவம் நடக்கிறது. 15ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.