வால்பாறை:வால்பாறை விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் உலக நல வேள்வி மற்றும் ஜலாபிஷேக பெருவிழா நடந்தது.வால்பாறை சுப்பிமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவிற்கு பழநி தவத்திருமெய்தவ அடிகளார் தலைமை வகித்தார். காமாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தை விஷ்வஹிந்த் பரிஷத்தின் மாவட்ட தலைவர் நாட்ராயசுவாமி துவக்கி வைத்தார். அதன் பின் முருகனுக்கு பால் அபிஷேக பூஜை நடந்தது. விழாவில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.