பதிவு செய்த நாள்
13
நவ
2018
02:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அம்பராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்மபாபிஷேக விழா நடந்தது.
கடந்த, 9ம் தேதி மாலை வேத பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
கடந்த, 10ம் தேதி மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஹோமங்கள் நடந்தது. மாலை, யந்திர ஸ்தாபனம், எண்வகை மருந்து சாற்றுதல் நடந்தது. 11ம் தேதி காலை ஹோமங் கள், ரக்ஷ பந்தனம், நாடி சந்தானம், ஸ்வர்ண ஆகுதி, ஸ்பரிசா பலியை தொடர்ந்து, 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப் பட்டது.