பதிவு செய்த நாள்
14
நவ
2018
12:11
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று 13 ல் கந்தசஷ்டி விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு‚ அனுக்ஞை‚ விக்னேஷ்வர பூஜை‚
புண்யாக வாசனம்‚ யாகசாலை பூஜை‚ பூர்ணாகுதி‚ மூலவருக்கு மகா அபிஷேகம்‚ அலங்காரம் நடந்தது.பகல் 11:30 மணிக்கு‚ சக்திவேல் வாங்கும் வைபவம் நடந்தது.
இரவு 7:30 மணிக்கு‚ சூரசம்ஹாரம் நடந்தது.விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு நாளை (நவம்., 15ல்) முன்னிட்டு நேற்று (நவம்., 13ல்) காலை வள்ளி, தெய்வானை உடனுறைசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடந்தது.
திண்டிவனம்ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூரசம் ஹாரம் நடந்தது. இன்று (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தன அலங்காரமும், உற்சவருக்கு திருக்கல்யாண மகா உற்சவம் நடக்கிறது.
அவலூர்பேட்டைசித்தகிரி முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்டாச்சிபுரம்கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றன. பின்னர், வீரபாகு தேவர்கள் ஊர்வலமும் நடைபெற்றது.மாலை 6:30 மணிக்கு
வீரபாகு தேவர்கள் கம்பம் ஏறுதலும், இரவு சூரசம்ஹாரமும் நடைபெற்றது.