திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் பதிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2018 12:11
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் மற்றும்சனீஸ்வரர் தேவஸ்தானம் சார்பில், சல்லித்தோட்டம் வளாகத்தில், கொல்கத்தா மனோஜ்குமார் போதார் அளித்த நன்கொடை ரூ.1.30 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதி, கீழ் அக்ரஹாரத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட எமதீர்த்தம் குளம், ரூ.1.20 கோடி மதிப்பில் கோவில்ஊழியர்களுக்கான குடியிருப்புகள், சுபாமி தரிசனம் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதி ஆகியவற்றை முதல்வர் நாராயணசாமி நேற்றுது வக்கிவைத்தார்.
இதற்கான விழாவில் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா, கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புனரமைக்கப்பட்ட எமதீர்த்தம் குளத்தில் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதி, சனீஸ்வர பகவானின் தல வரலாறு, பொது மக்களுக்கான இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.