பதிவு செய்த நாள்
15
நவ
2018
12:11
தேனி: தேனி,மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று (நவம்., 14ல்) கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர்.
தேனி - பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நவ.8 ல் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து பால் குடம் எடுத்தனர். நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) மாலை சூரசம்ஹாரம் நடந்தது.
நேற்று (நவம்., 14ல்) காலை முருகன், வள்ளி- தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். . கூடலூர்கூடலூர் கூடல் சுந்தரவேலவருக்கு திருக் கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. முன்னதாக அவர்கள் சீர் கொண்டு வந்தனர்.சுந்தரவேலவர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு மெட்டி அணிவிக்கப்பட்டு, கெட்டி மேளம் முழங்க மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரவேலவரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட் டது.மாலையில் மயில்வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம்செய்திருந்தது.
* பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலசுப்பிரமணியருக்கும், தெய்வானைக்கும் கெட்டி மேளதாளத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். கல்யாண விருந்தை வழக்கறிஞர் அம்பாசங்கர் வழங்கினார். மொய் எழுதப் பட்டது.
* காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியனுக்கும், தெய்வானைக்கும் திருக் கல்யாணம் நடந்தது. கல்யாண விருந்து மற்றும் மொய் எழுதப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேஷன் , பக்தர்கள் செய்தனர்.
* போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தேவசேனா சுப்பிரமணியருக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. அலங்காரத்தை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் அண்ணாத்துரை , முருகன் கந்தசஷ்டி திருக்கல்யாண அன்னதான அறக்கட்டளையினர் செய்தனர்.கம்பம் கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் வெண்பட்டு உடுத்தி முருகன் எழுந்தருளினார். வள்ளி தெய்வானை அலங்காரத்தில் பச்சை, மஞ்சள் நிறங்களில் பட்டு சேலை அணிந்து மணக்கோலத்தில் இருந்தனர். காலை 11:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர, முருகன் ,வள்ளி -தெய்வானை கழுத்தில் மங்கல நாணை சூட்டினார். பின்னர் சிறப்பு அபிஷேக , ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.வேலப்பர் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில்களிலும் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்நடைபெற்றது.