மடத்துக்குளம்:கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கணியூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலையணிந்தனர்.மடத்துக்குளம் அருகே கணியூர் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் வழிபாடு, சிறப்பு பூஜையில் ஈடுபடுவதோடு, இங்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வது வழக்கம்.கார்த்திகை முதல் தேதியன்று, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கினர். இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.