பதிவு செய்த நாள்
19
நவ
2018
01:11
கூடலூர்:ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்குவதற்காக கம்பத்தில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து அலுவலர்களை நியமிக்க வேண்டும். என, பக்தர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாக செல்கின்றன. சபரிமலையில் மண்டல பூஜை காலங்களிலும், மகரஜோதி விழா நேரத்திலும் கூடுதல் ஐயப்ப பக்தர்கள் வருகை இருக்கும். இதனால், கம்பம் மெட்டு வழியாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படும்.
லோயர்கேம்பில் இயங்கி வந்த போக்குவரத்து சோதனைச் சாவடி 3 ஆண்டுகளுக்கு முன் தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் பெர்மிட் அங்குதான் வாங்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம், பாளையம், உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பக்தர்களின் வாகனங்கள் பெர்மிட்வாங்க பழனிசெட்டிபட்டிக்கு சென்று திரும்ப வேண்டும்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்கள் சோதனைச் சாவடி மாற்றப் பட்ட விபரம் தெரியாமல், பெர்மிட் வாங்க லோயர்கேம்ப் வந்து, மீண்டும் பழனிசெட்டி பட்டிக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், சபரிமலை சீசன் முடியும் வரை கம்பத்தில் தற்காலிக போக்குவரத்து சோதனைச் சாவடி அமைத்து, பெர்மிட் கொடுப்பதற்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, ஐயப்ப
பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.