தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2018 05:11
தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணனர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார 108 சங்காபிஷேக வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணனர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.