பதிவு செய்த நாள்
20
நவ
2018
01:11
உடுமலை:இந்து முன்னணி, உடுமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன், கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கோவை கோட்ட இந்து முன்னணி சார்பில், பல்லடம், பொங்கலூர், வரும் டிச.,23ல், கஜபூஜை, 24ல், அஸ்வமேத யாக பூஜை, 1,008 கோமாதா பூஜை மற்றும் 25ம் தேதி, ஒரு லட்சத்து எட்டு தம்பதியர் பங்கேற்கும், மகாலட்சமி வேள்வி என இந்து ஆன்மிக திருவிழா நடக்கிறது.
நிகழ்ச்சியை விளக்கும் ரத யாத்திரை டிச., வருகிறது. அதற்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து, ஆன்மிக திருவிழா பிரசாரம் மேற்கொள்வது.சபரிமலை புனிதத்தை காக்க, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.