பதிவு செய்த நாள்
20
நவ
2018
01:11
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், முதல் சோமவாரத்தையொட்டி சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையையொட்டி,
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 19ல்) காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சுவாமி சன்னதியில், மாலை 5:00 மணிக்கு மேல் புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. பின்னர், சுவாமிக்கு சங்காபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.