திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2018 12:11
விழுப்புரம்: கார்த்திகை தீபம் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 700 போலீசார் பாதுகாப்பு பணிக்கு புறப்பட்டு சென்றனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை 23ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கோவிலுக்கும், அன்று மாலை மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தை காணவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களின் கூட்டம் வருவது வழக்கம்.இதையொட்டி, விழுப்புரம், கடலுார், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 19ம் தேதி 500 போலீசாரும், நேற்று 200 போலீசார் என 700 போலீசார் திருவண்ணாமலைக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் விபத்துகளில் ஏதும் சிக்காமல் இருப்பதற்காக, செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் முக்கிய இடங்களில் காவல் துறை சார்பில் வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்லவும், விபத்துகள் ஏற்பட்டால் காயமடைந்தோரை மீட்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்தும் காவல் துறை சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.