குமாரபாளையம்: குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, தனியார் திருமண மண்டபத் தில், மாதம் ஒருமுறை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஒருங்கிணப்பாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். ஈரோடு, அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேத்தலார் சத்யமூர்த்தி, நோய்களை குணமாக்கும் ராகங்கள் எனும் தலைப்பில் பேசினார். கர்நாடக சங்கீதம் மற்றும் பக்தி பாடல்களை, மாணவியர் பாடினர். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.