பதிவு செய்த நாள்
23
நவ
2018
02:11
வேலூர்: வேலூரிலிருந்து, 100 சமையல்காரர்களுடன், 60 டன் காய்கறிகள் திருவண்ணாமலைக்கு சென்றன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பரணி தீபம், கார்த்திகை தீபம் இன்று (நவம்., 23ல்)நடக்கிறது.
இதில், பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, வேலூர் மாவட்ட அண்ணாமலையார் பக்தர்கள் சங்கம் சார்பில், வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, கலவை, திமிரி ஆகிய பகுதிகளில் இருந்து, 60 டன் காய்கறிகளுடன், 100 சமையல்காரர்கள் திருவண்ணா மலைக்கு நேற்று (நவம்., 22ல்) புறப்பட்டு சென்றனர். அவர்கள், 24 வரை அங்கு தங்கியிருந்து, பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்குவர் என, சங்கத் தலைவர் தீனதயாளன் கூறினார்.