பதிவு செய்த நாள்
23
நவ
2018
02:11
திருச்செங்கோடு: கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு, அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு, கார்த்திகை மாதம் தீபவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று (நவம்., 22ல்), மூன்று சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு, 8:00 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.