பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
கோவை:பொங்கலூரில் ஒரு லட்சம் குடும்பம் பங்கேற்கும் சோடஷ மகாலட்சுமி மகா யாகத்துக்காக, கடந்த 10 நாட்களில் 75 ஆயிரம் செங்கல் சேகரிக்கப்பட்டுள்ளன.இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில், டிச., 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் நடக்கிறது. தொழில்வளம், விவசாயம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகிடவும், உலக நன்மை பெற வேண்டியும் நடக்கும் யாகத்தில் யானைகள், 1,008 நாட்டு பசுக்கள், 108 குதிரைகள் பங்கேற்கின்றன.
இதற்காக, கடந்த 13ம் தேதி கோவை காந்திபார்க் முருகன் கோவிலிலிருந்து, நான்கு விழிப்புணர்வு ரதயாத்திரை புறப்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரதங்களுக்கு, மக்கள் சிறப்பான வரவேற்பு வழங்கினர். மகாயாகத்துக்காக செங்கல் மற்றும் நெய் வழங்கி வருகின்றனர்.
இந்து முன்னணி செய்திதொடர்பாளர் தனபாலன் கூறுகையில், கோவையில் சிவபார்வதி ரதம், திருப்பூரில் வீரலட்சுமி ரதம், ஈரோட்டில் மகாலட்சுமி ரதம், கோவை வடக்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ராமர் ரதம் என நான்கு ரதங்கள்ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. நான்கு மாவட்டங்களில், 10 நாட்களில், 75 ஆயிரம் செங்கல் மற்றும், 600 கிலோ நெய் வழங்கியுள்ளனர், என்றார்.