பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
நெகமம்:நெகமம் அடுத்த, ஆவலப்பம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் இன்று 24ல், தீபத்திருவிழா நடக்கிறது.நெகமம் அடுத்த ஆவலப்பம்பட்டியில் பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் உள்ளது.கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, இன்று (நவம்.,24ல்) காலை, 8:10 மணிக்கு விநாயகருக்கு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. காலை, 9:10 மணிக்கு மாரியம்மன் கோவிலில் அபிஷேக அலங்கார பூஜையும், 9:30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில், அஷ்டலட்சுமி கோவில், சென்றாயபெருமாள் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலுங்கார பூஜைகள் நடக்கிறது.