Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுாரில் ஐயப்ப பக்தர்கள் பால்குட ... மஹா அவதார் பாபாஜி குருஜெயந்தி, ஆராதனை மஹா அவதார் பாபாஜி குருஜெயந்தி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் திருவாசகம் முற்றோதல் ஞானவேள்வி
எழுத்தின் அளவு:
திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் திருவாசகம் முற்றோதல் ஞானவேள்வி

பதிவு செய்த நாள்

26 நவ
2018
12:11

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா நிகேதனில், நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேள்வியில் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலுார், ஞானானந்தா நிகேதனில், உலக நன்மைக்காக, திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில், ரிஷப வாகனத்தில், சிவபெருமான், அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு வேள்வி துவங்கியது.நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கினார். சதாசிவகிரி சுவாமிகள், சமாநந்த சரஸ்வதி, பிரபவானந்த சரஸ்வதி, ஆத்மதத்வானந்த சரஸ்வதி, ஞான சிவானந்த சரஸ்வதி, அம்ருதேஸ்வரானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் ஆகியோருக்கு சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்து திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர்.திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழு, மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், கீழ் விஷாரம் அப்பர் சுவாமிகள் மடம் தேவார பயிற்சி மைய மாணவர்கள், கண்டாச்சிபுரம் திருவாசகம் முற்றோதல் குழு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் பலரும் வேள்வியில் பங்கேற்றனர்.காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை இடைவிடாது நடந்த வேள்வியில் அறக்கட்டளை அறங்காவலர்கள் பரமேஸ்வரன், சுவாமிநாதன், சுப்ரமணியன், வெங்கடேஷ், நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar