அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை யோகி ராம்சுரத் குமார் நாம சேவா சமிதியில், மஹா அவதார் பாபாஜி சித்தர் பிரானின் குரு ஜெயந்தி விழாவும், சித்தர்களின் அன்னையாம் பாலா திரிபுர சுந்தரி தேவியின் ஆராதனையும் நடந்தது. மெட்டுக்குண்டு ஞான வெளி சித்தர் சங்கரேஸ்வர சாமிகள் வழி நடத்தினார். காலையில் கணபதி ேஹாமம், பாபாஜி நாம ஜப ேஹாமம், கன்யா பூஜை. சுமங்கலி பூஜை, பிரம்மசாரி பூஜை, தம்பதி பூஜைகள் நடந்தது. பேராசிரியை கிருத்திகா, சொற்பொழிவாளர் சிவக்குமார் சொற்பொழிவாற்றினர். சூரிய நாராயணன் சிறப்பு பஜனை நடத்தினர். மாலையில் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா ஸஹஸ்சர நாமம் பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை பக்த ஜன க்ரியா பாபாஜி சித்தர் பீடம் நிர்வாகிகள் செய்தனர்.