நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர், சொக்கநாதர், செல்வ விநாயகர், நடுவீரப்பட்டு செட்டி பிள்ளையார் உள்ளிட்ட கோவில்களில் நேற்று (நவம்., 26ல்) சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 26ல்) இரவு 7:00 மணிக்கு விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விநயாகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.