நெட்டப்பாக்கம்: கோர்க்காடு மகான் கோரக்கர் சித்தர் குருபூஜை விழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள மகான் கோரக்கர் சித்தர் ஜனன மகா ஐந்தாம் ஆண்டு குரு பூஜை விழா நாளை (28ம் தேதி) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதை யொட்டி, காலை 6 மணிக்கு மகா ஹோமம், காலை 10 மணிக்கு மகா அர்ச்சனையும், மதியம் ஒரு மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 3 மணிக்கு மணிக்கு சித்தர்கள் ஆசி வழங்கல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சித்தர்கள் அருளுரை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் மற்றும் குடும்பத் தினர்களின் ஜாதகத்தினை கோரக்கர் சித்தர் பீடத்தில் கொடுத்து ஆசிபெற்றுக் கொள்ளலாம். விழாவிற்கான ஏற்பாடுகளை மகான் கோரக்கர் சித்தர் பீட நிர்வாகக் குழுவினர் மற்றும் கோர்க் காடு கிராம வாசிகள் செய்துள்ளனர்.