திண்டுக்கல் அருகே ஆதி சுயம்பு ஈஸ்வரர் -அபிராமி அம்மன் கோயிலில் கார்த்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2018 01:11
திண்டுக்கல்:சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர்-அபிராமி அம்மன் கோயிலில் கார்த்திகை தீப திருநாள் விழா நடந்தது. காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலையில் கம்பத்து பெருமாளுக்கு கம்பத்து கல் தீபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பிறகு ஆதிசுயம்பு ஈஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் வீரசபரி செய்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி உதயகுமார் சிவாச்சாரியார் செய்திருந்தார்.