பதிவு செய்த நாள்
27
நவ
2018
01:11
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை மாத இரண்டாம் திங்கள் கிழமையான நேற்று (நவம்., 26ல்) காலை, 6:00 மணிக்கு கணபதி யாகம், ருத்ரமகா யாகம் செய்து, பூஜையில் வைக்கப்பட்ட புனிதநீரை மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதத்தில் மூன்றாவது திங்கட்கிழமையான வரும் டிச., 3ல் 1,008 சங்காபி ?ஷகம் நடக்கவுள்ளது. வரும், 30ல், காலபைரவருக்கு மாலை, 108 சங்காபிஷேகம், 1,008 வடை மாலை சார்த்தி சிறப்பு யாகபூஜை செய்யப்படவுள்ளது.