பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
பழநி: பழநி திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது.கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடிகோயிலில் பைரவருக்கு, அபிேஷகம், வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதேபோல அ. கலையம்புத்துார் கல்யாணியம்மன் சமேத கைலாசநாதர்கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து சிவன், காலபைரவருக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.நேதாஜிநகர் காமாட்சிஅம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில்களிலும் பைரவருக்கு அபிஷேக, பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், பூசணி, நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர்.தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. கால பைரவருக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் சொர்ணபிேஷகம், வடை மாலை சாத்துதல்நடந்தது. காலபரைவர் ஜெயந்தி மற்றும் விழாவையடுத்துசிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் ஜெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.