பதிவு செய்த நாள்
04
டிச
2018
12:31
வாணியம்பாடி: பாலாற்றில், கங்காளர் சிலைக்கு கண்டெடுக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, அம்பலுார் பாலாற்றங்கரையில் உள்ள, ஒரு கல்லில் அப்பகுதி மக்கள் துணி துவைத்து வந்தனர். இந்த கல்லை, ஒட்டன் கல் என்ற அழைக்கின்றனர். அதை ஆய்வு செய்ததில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை என தெரியவந்தது. நான்கு கைகளில், இரண்டு உடைந்தும், ஜடா மகுடத்துடன், சிலை உள்ளது. இரு காதுகளில், வெவ்வேறு வகையான காதணிகள் உள்ளன. கால் பகுதியில், மான், குள்ள பூதம் உள்ளது. இடுப்புக்கு மேல் பகுதியில் மக்கள் தெரிகின்றனர். சிவபெருமான் கங்காளர் வடிவம் எடுத்ததாக, புராணங்களில் உள்ளன. அப்படிப்பட்ட சிலை, பாலாற்றில் அடித்து வரப்பட்டு, இங்கு கரை ஒதுங்கியுள்ளது. இதையறிந்த மக்கள், சுத்தப்படுத்தி வழிபாடு செய்வதாக, உறுதியளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.