பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் உள்ள மிகவும் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் ஓரத்தில் மிகவும் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிதிலம் அடைந்து இருந்த இக்கோவிலை புதுப்பிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். உபயதாரர் மற்றும் கோவில் நிதி சேர்த்து, ஒரு கோடி ரூபாய்க்கு, திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கருவறை, கோபுரம், மகா மண்டபம், அம்மன், சிவன், நவக்கிரகங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள், காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டுள்ளன. தியான மண்டபம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தரைத்தளத்துக்கான கற்கள் இப்போதுதான் வந்துள்ளன. சோபன மண்டபத்துக்கான மதிப்பீடு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.