பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
கிணத்துக்கடவு:பொங்கலூரில் நடக்கும், மகாலட்சுமி யாகத்துக்காக, கிணத்துக்கடவு பகுதி கிராமங்களில், இந்து முன்னணி சார்பில் சிவபார்வதி ரத யாத்திரை நடக்கிறது. இதில், யாக குண்டம் அமைப்பதற்காக செங்கல் மற்றும் நெய் பெறப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் தில்லைநகரில், இம்மாதம், 23ல் மகாலட்சுமி யாகம் நடக்கிறது.
இதற்காக, கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும், கிராமங்கள் தோறும் சிவ பார்வதி ரத யாத்திரை துவங்கி நடக்கிறது.யாக குண்டம் அமைப்பதற்காக, கிராம மக்களிடம் இருந்து, செங்கல் மற்றும் பசு நெய் பெறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிசம்., 2ல்) கிணத்துக்கடவு பகுதியில் ரதயாத்திரை நடந்தது.
இரவு அரசம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்திலும்,நேற்று (டிசம்., 3ல்) சூலக்கல் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் ரதம் பாதுகாக்கப்பட்டது. இன்று (டிசம்., 4ல்) ஆனைமலை, மடத்துக்குளத்தை தொடர்ந்து, வரும், 7ம் தேதி நெகமம் பகுதியில், யாக குண்டத்துக்கான பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன.
இம்மாதம், 23, 24, 25 ஆகிய தேதிகளில் பொங்கலூரில், காரியங்கள் தடையின்றி நடக்க கஜ பூஜை, நாடு நலமும் வளமும் பெற, 108 அஸ்வ பூஜை, குடும்பத்தில் ஐஸ்வர்யம், அமைதியும் பெருக மகாலட்சுமி குடும்ப பூஜையும் நடக்கிறது.