பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
நெகமம்:சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், மாதாந்திர ஜோதி வழிபாடு நெகமத்தில் நேற்று (டிசம்., 3ல்) நடந்தது.நெகமம் நாகர் மைதானம் அருகே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சமீபத்தில் திறக்கப்பட்டது. தற்போது, சங்கத்தின் அன்பர்களால், மாதாந்திர ஜோதி வழிபாடு நடத்தப்படுகிறது.
நேற்றைய (டிசம்., 3ல்) வழிபாடு காலை, 9:00 மணிக்கு அகவல் பாராயணத்துடன் துவங்கியது. திருவருட்பா சொற்பொழிவு, மகாமந்திர வழிபாடு, தியானம் மற்றும் ஜோதி வழிபாட்டில், சன்மார்க்க சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது.இம்மையத்தில், வெள்ளிக்கிழமைகளில் காலை, 6:00 மணிக்கு வார வழிபாடும், அகவல் பாராயணமும் நடைபெறுகிறது.