பதிவு செய்த நாள்
07
டிச
2018
01:12
கோவை:கொச்சுவெலி - ஐதராபாத் இடையே, சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொச்சுவெலியில் இருந்து ஜன.,7, 14, 21, 28ம் தேதிகளில் காலை, 7:45 மணிக்கு புறப்படும் ரயில், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர் வழியாக மறுநாள் மதியம், 2:00 மணிக்கு ஐதராபாத் செல்கிறது. அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து ஜன., 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் இரவு, 9:30 மணிக்கு புறப்படும் ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை வழியாக மறுநாள் இரவு, 10:55 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.