பதிவு செய்த நாள்
07
டிச
2018
01:12
கடலூர்:கோவில் இடங்கள் மற்றும் நிலங்களை மீட்க மாவட்டத்தில் 2,491 பேருக்கு நேட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள், வீடுகள், கடைகள், காலி இடங்கள் குறித்து ஆய்வு செய்து கோவிலி்ல் சேர்க்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,627 கோவில்களில் தனித்தனி கமிட்டி அமைக்கப்பட்டு, கோவில் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கோவில்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கோவில் சொத்துக்கள், வாடகை பாக்கி, இதுவரை கோவில் சொத்து கண்டறியப் படாமல் இருந்த இடங்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.மேலும், கோவில் இடங்களில் நீண்ட நாட்களாக செலுத்தப்படாமல் இருந்த வாடகை பாக்கியை வசூல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1.72 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவில் இடங்கள் கண்டறிப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்துள்ள 2,491 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.