திருக்கோஷ்டியூரில் நாளை (டிசம்., 8ல்) வைகுண்ட ஏகாதசி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2018 01:12
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நாளை (டிசம்., 8ல்) துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் 21 நாட்கள் நடைபெறும். நாளை (டிசம்., 8ல்) பகல்பத்து உற்ஸவம் துவங்குகிறது.
காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், ஆழ்வார்களுக்கு அருள்பாலித் தலும், மாலையில் சன்னதி எழுந்தருளலும் நடைபெறும். டிச.,17 ல் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும். மறுநாள் டிச.,18 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநாள் மண்டபத்தில் பெருமாள் காலையில் சயன கோலத்தில் அருள்பாலிப்பார்.
மதியம் அமர்ந்த திருக்கோலத்திலும், இரவில் ராஜாங்க கோலத்திலும் அருள்பாலிப்பார் பின்னர் இரவு 11:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன் சொர்க்க வாசல் எழுந்தருளி பரமபதவாசலை கடந்து செல்வர்.
தொடர்ந்து மறுநாள் முதல் பத்து நாட்கள் ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.தினசரி இரவு 7:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் பல்லக்கில் எழுந்தருளி பரமபதவாசலை கடந்து ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதலும், தாயார் சன்னதியில் எழுந்தருளலும் நடைபெறும்.